கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் முதலமைச்சரை தொடர்புபடுத்தி பேட்டி அளித்த மனோஜ், சயன் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்து உதகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை முயற்சியின் போது காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் சயன், மனோஜ், திபு, ஜிதின்ஜாய், ஜம்சீர்அலி, சந்தோஷ்சாமி, உதயகுமார், சதீசன், வாளையார் மனோஜ், பிஜின்குட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முதலமைச்சரை தொடர்புபடுத்தி பேட்டி அளித்த மனோஜ், சயன் மீது அரசுத் தரப்பில் மற்றொரு வழக்கும்,
தொடரப்பட்ட நிலையில் இரண்டு வழக்குகளும் இன்று உதகை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன.
அப்போது ஜம்சீர்அலி, சதீசன், உதயகுமார், சந்தோஷ், மனோஜ், ஜிதின்ஜாய் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், சயன், வாளையார் மனோஜ், பிஜின், திபு ஆகியோர் ஆஜராகவில்லை
இதையடுத்து அவர்களது ஜாமீன் மனுவை ரத்து செய்த நீதிபதி வடமலை அவர்களுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.