தமிழகம், புதுவையில், ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு : சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்..

தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குமரிக்கடல் முதல் தெலுங்கானா வரை வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது,

இன்று மேற்கு உள் தமிழக பகுதிகளில் மழை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த சூழல் மாறியதாக விளக்கமளித்துள்ளது.

இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கும், நீலகிரி,கோவை,தேனி,திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில்

இடி,மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக தூத்துக்குடியில் மழை பதிவாகி உள்ளதாகவும்,

சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வா? : அமைச்சர் செங்கோட்டையன் …

பிரதமர் மோடியின் அருணாசலப் பிரதேச பயணம்: சீனா கண்டனம்

Recent Posts