சென்னை குடிநீரில் டையாக்சின் நச்சு; புற்றுநோய் ஏற்படும் ஆபத்து: ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை குடிநீரில் டையாக்சின் நச்சு கலந்திருப்பதால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளது.

எனவே, பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரமான புழல் ஏரியில் உள்ள தண்ணீரில் மனித உடல் நலனுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நச்சுகள் கலந்திருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

சுற்றுச்சூழல் குறித்த அக்கறையின்மையால் ஏற்பட்டுள்ள இப்பாதிப்பைத் உடனடியாக தடுக்காவிட்டால் சென்னை மாநகர மக்களுக்கு நினைத்துப் பார்க்க முடியாத கேடுகள் ஏற்படக்கூடும்.

புழல் ஏரியின் அடிப்பகுதியில்  படிந்திருக்கும் படிமங்களில் இருந்து 32 மாதிரிகளையும், 6 தண்ணீர் மாதிரிகளையும் எடுத்து அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்

 

மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் புழல் ஏரி நீரில் நுண்பிளாஸ்டிக் அதிக அளவில் கலந்திருப்பது தெரியவந்திருக்கிறது. ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு கன சென்டிமீட்டருக்கு 27 துகள்கள் நுண்பிளாஸ்டிக் கலந்திருப்பது தெரியவந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நுண்பிளாஸ்டிக் துகள்கள் கலந்த குடிநீரை அப்படியே குடிப்பதால் பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படாது.  தண்ணீ

மெட்ரோ ரயில் போக்குவரத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி: திருப்பூரில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

மக்களவைத் தேர்தல்: அதிமுக சார்பில் விருப்ப மனு அளிக்க கால அவகாசம் நீட்டிப்பு

Recent Posts