அருணாச்சல பிரதேசத்தில் குறிப்பிட்ட இனத்தவர்களுக்கு நிரந்தர குடியுரிமையை வழங்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மாநிலத்தை சேராத மற்றும் பல ஆண்டுகளாக அங்கேயே வாழ்ந்து வருபவர்களுக்கு உரிமையை வழங்க அரசு நடவடிக்கையை எடுத்ததற்கு அம்மாநில மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கடந்த சில நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றாலும் சட்டசபை தொடர்ந்து நடைபெற்றது. இதனால் போராட்டம் தீவிரம் அடைந்தது.
பொதுமக்கள் ஆங்காங்கே கூடி தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர். வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை மாலையில் போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து போராட்டம் மேலும் வலுப்பெற்றது.
தீ வைப்பு சம்பவங்கள் அதிகரித்தது. 50க்கும் மேற்பட்ட கார்கள் எரிக்கப்பட்டது. இடாநகரில் காவல் நிலையங்கள், தீயணைப்பு நிலையங்கள், திரையரங்குகள் என எதுவும் தப்பவில்லை.
இதற்கிடையே அம்மாநில துணை முதல்வர் சவுனா மெயின் வீட்டையும் எரித்துள்ளனர். இதற்கிடையே எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையைவிட்டு வெளியேறாமல் அங்கேயே உள்ளனர்.
இட்டாநகரில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கும் வகையில் ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே போராட்டம் காரணமாக சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும் முடிவை கைவிடுவதாக மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.