ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு..

ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.10 ஆண்டுப் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்ததுள்ளது

இதன் மூலம் மஞ்சள் ஏற்றுமதி அதிகரிப்பதுடன் சர்வதேச அளவில் நல்ல விலை கிடைக்கவும் வாய்ப்பு உருவாகியுள்ளது

. ஈரோடு,திருப்பூர், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலப் பகுதிகளில் விளையும் மஞ்சளுக்கு மணமும் நல்ல நிறமும் இருப்பதால் அதற்கு நல்ல விலை கிடைக்கிறது.

பல்வேறு மருத்துவச் சிறப்புகளையும் மஞ்சள் கொண்டுள்ளது. இயற்கை மருத்துவத்திலும் மஞ்சள் பரிந்துரை செய்யப்படுகிறது.

மஞ்சளுக்கு இத்தைகைய அங்கீகாரம் கிடைத்திருப்பது குறித்து விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே சிறுமலை வாழைப்பழம், விருப்பாச்சி வாழைப்பழம், நீலகிரி தேயிலை போன்றவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

ரஃபேல் விமான பேர ஊழலை அம்பலப்படுத்திய ஊடகங்களைப் பாதுகாப்போம்: திருமாவளவன்

, கேரளா வயநாடு பகுதியில் மாவோயிஸ்டுகள் -அதிரடிப்படையினர் இடையே துப்பாக்கிச்சண்டை..

Recent Posts