ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் கோலி முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4 வது ஒரு நாள் போட்டி சண்டிகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா அணிக்கு 359 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணியத்தது
இந்திய அணி. முன்னதாக டாஸ் வென்ற கேப்டன் விராட் கோலி பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.இதனை தொடர்ந்து இந்திய அணி களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் தவான் இந்திய அணி சிறப்பான துவக்கம் தந்தனர்.
இருவரும் இணைந்து முதல் விக்கெட்க்கு 31 ஓவர்களில் 193 ரன்களை குவித்தனர். சிறப்பாக விளையாடிய ரோஹித் 95 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய தவான் 115 பந்துகளில் 143 ரன்களை குவித்தார். கே.எல் ராகுல் 26 ரன்களையும் , பண்ட் 36 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
முடிவில் இந்தியா அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 358 ரன்களை எடுத்தது. 359 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆஸ்திரேலியா அணி களமிறங்கவுள்ளது.