பொள்ளாச்சியில் மாணவிகள், இளம்பெண்களை ஏமாற்றி காதல் வலையில் வீழ்த்தி, சீரழித்த வழக்கில் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் திருநாவுக்கரசு (வயது 27),
அவருடைய நண்பர்கள் என்ஜினீயர் சபரிராஜன் (27), சதீஷ் (27) மற்றும் வசந்தகுமார் (27) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தலைமையில்,
போலீசார் இந்த வழக்கில் விசாரணை நடத்திய போலீசாரிடம் வழக்கு குறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றுமாறு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் வலியுறுத்தி வந்த நிலையில், சி.பி.ஐ.க்கு வழக்கு விசாரணையை மாற்ற நேற்று முன்தினம் முடிவு செய்தது.
இந்த நிலையில், வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 4 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சி.பி.சி.ஐ.டி. வழக்கை விசாரித்து வரும் நிலையில்,
தமிழக உள்துறை அமைச்சகம் சி.பி.ஐ.க்கு வழக்கை மாற்றி அரசாணை வெளியிட்டு உள்ளது.