பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை அரசாணையில் வெளியிடுவதா?: கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்கள் பொதுவெளியில் வெளியிடக் கூடாது என்பது விதிமுறை. ஊடகங்கள், பத்திரிகைகள் ஆகியவை இந்த விதிமுறையை கடைப்பிடித்து வருகின்றன. இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், முகவரி ஆகியவை குறிப்பிடப்பட்டிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக சமூக வலைத்தளங்களில், அரசே சட்டவிரோதமாக பாதிக்கப்பட்ட இளம் பெண்களின் பெயர்களை வெளியிடுவதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.