10 ஆண்டுகளில் தமிழக அணைகளை தூர்வாரி பராமரிக்க எவ்வளவு தொகை செலவு செய்யப்பட்டது
என பொதுப்பணித்துறை விளக்கமளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. பல்வேறு நீர்நிலைகள், அணைகளை தூர்வார உத்தரவிடக் கோரிய 2 வழக்குகளில் நீதிபதிகள் இவ்வாறு உத்தரவிட்டனர்.
தமிழகத்தில் எத்தனை அணைகள், முக்கிய கண்மாய்கள் உள்ளன? என்றும், கடைசியாக எப்போது தூர்வாரப்பட்டன? என்றும் கேள்வி எழுப்பினர்.
அணைகள் கட்டப்பட்டபோதும், தற்போதும் அவற்றின் கொள்ளளவு எவ்வளவு? என்றும், எவ்வளவு தண்ணீர் கடலில் கலக்கிறது? என்றும் கேள்வி எழுப்பினர்.
விவசாயிகள் உள்ளிட்டோரைக் கொண்டு அரசுக்கு செலவின்றி அணைகள் கண்மாய்களில் இருக்கும் மணல், களிமண்ணை எடுக்க வாய்ப்புள்ளதா?
என்றும் குடிமராமத்து மூலம் ஏதேனும் அணை தூர்வாரப்பட்டுள்ளதா? என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பொதுப்பணித்துறை செயலர்,
தலைமைப் பொறியாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.