கோவாவில் பெரும்பான்மை இல்லாத பாஜக அரசை நீக்கிவிட்டு, தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என ஆளுநரிடம் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சந்திரகன்ட் கவ்லேகர், ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில், பாஜக எம்எல்ஏ பிரான்சிஸ் டிசோசா காலமானதை அடுத்து,
மனோகர் பாரிக்கர் தலைமையிலான அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து விட்டதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. எனவே பாஜக அரசை நீக்கிவிட்டு,
தனிப் பெரும் கட்சி என்ற முறையில் காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக, ஜனநாயக விரோதமாக குடியரசுத் தலைவர் ஆட்சியை கோவாவில் அமல்படுத்த முயன்றால், அதனை காங்கிரஸ் எதிர்க்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனிடையே தங்கள் எம்எல்ஏக்களை தலைநகர் பனாஜிக்கு வருமாறு கோவா பாஜக அழைப்பு விடுத்துள்ளது.