.இந்தியாவை காப்பாற்ற இப்போது 2,293 அரசியல் கட்சிகள் ; 149 கட்சிகள் புதிதாக பதிவு..

இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் விபரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் புதிய தரவு வெளியாகியுள்ளது.

இதில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பதற்கு முன்னதாக மார்ச் 9-ம் தேதி வரையில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும் அடங்கியுள்ளது. மொத்தம் இந்தியாவில் இப்போது 2,293 அரசியல் கட்சிகள் உள்ளன.

ஏழு அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் 59 அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் இதில் அடங்கும்.

கடந்த ஜனவரியில் இருந்து மார்ச் 9-ம் தேதி வரையில் 149 கட்சிகள் பதிவாகியுள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம், சத்தீஷ்கார் மாநிலங்களில்

கடந்த நவம்பர்-டிசம்பரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற போது 58 கட்சிகள் புதிய கட்சிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையிலிருந்து புதிய தலைமுறை மக்கள் கட்சியும் புதிய கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இக்கட்சிகள் பதிவுசெய்யப்பட்டவை ஆனால் நிலையான சின்னம் ஒதுக்கப்படவில்லை. வாக்கெடுப்பு குழுவால் வழங்கப்பட்ட இலவச சின்னங்கள் பட்டியலிலிருந்து ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும்.

சமீபத்திய சுற்றறிக்கையின்படி, தற்போது 84 இலவச சின்னங்கள் உள்ளது. விதிமுறைகளின்படி மாநில அல்லது தேசிய அளவில் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியாக மாறுவதற்கு,

சட்டமன்றத் தேர்தலில் அல்லது கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான சதவித வாக்குகளை பெற வேண்டும்

அல்லது சில எண்ணிக்கையிலான இடங்களைப் பெற வேண்டும். இக்கட்சிகள் அங்கீகாரம் பெற்ற கட்சிகள் கிடையாது.

2016-ம் ஆண்டு நிதி கட்டமைப்பு தொடர்பாக விசாரணையை மேற்கொள்ளுமாறு மத்திய நேரடி வரிகள் வாரியத்திற்கு (சிபிடிடி) தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியது.

அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் கிடைக்கும் நிதி பங்களிப்பை தவறான முறையில் பயன்படுத்தி இருக்கலாம் என தேர்தல் கண்காணிப்பகம் அச்சம் தெரிவித்தது.

கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரையில் நடைபெற்ற தேர்தல்களில் போட்டியிடாத இக்கட்சிகள் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.

இத்தகைய கட்சிகளில் பெரும்பகுதி கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு பயன்படுத்தப்படுவதாக அச்சம் தெரிவிக்கப்பட்டது.

சில கட்சிகள் செயல்பாட்டில் இல்லை என்று தேர்தல் ஆணையம் கண்டறிந்தது. தேர்தல் ஆணையம் ஒரு அரசியல் கட்சியை பதிவு செய்வதற்கான கட்டளையை கொண்டிருக்கிறது.

ஆனால், தேர்தல் சட்டங்கள் எந்தவொரு கட்சியையும் ரத்து செய்ய அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு கொடுக்க மறுக்கிறது.

அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து செய்ய அதிகாரம் வழங்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் கோரிக்கை சட்ட அமைச்சகத்தில் நிலுவையில் உள்ளது.

இருப்பினும் அரசியலமைப்பின் 324-வது சட்டப்பிரிவின்படி தேர்தல் ஆணையம் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்,

செயலற்று மற்றும் நீண்ட நாட்களாக தேர்தலில் போட்டியிடாத அரசியல் கட்சிகளை பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கலாம்.

இடைத்தேர்தலில் போட்டியிடும் 18 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் திமுக அறிவிப்பு..

மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

Recent Posts