7 மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை 2 கட்டமாக அறிவித்தது பாட்டாளி மக்கள் கட்சி..

மக்களவை தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் 5 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், எஞ்சிய 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக கூட்டணியில் உள்ள உள்ள பாமக, 7 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

தருமபுரி தொகுதியில் பாமக இளைரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார்.

விழுப்புரம் தொகுதியில் கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், கடலூர் தொகுதியில் இரா. கோவிந்தசாமி வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

அரக்கோணம் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, மத்திய சென்னை தொகுதியில் முனைவர் சாம் பால் ஆகியோர் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர்.

இந்த நிலையில் எஞ்சிய இரு தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்ட அறிக்கையின்படி, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். திண்டுக்கல் தொகுதியில் ஜோதி முத்து வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார்.

தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு..

ராகுல் பங்கேற்ற கல்லுாரி நிகழ்ச்சியில் விதி மீறல் இல்லை : தேர்தல் ஆணையர் சத்யபிரத சாஹூ

Recent Posts