.இயந்திரக் கோளாறால் நடுக்கடலில் தத்தளிக்கும் நார்வே கப்பல்

மோசமான வானிலை காரணமாக .இயந்திரக்பழுதாகி நடுக்கடலில் தத்தளித்து வரும் நார்வே கப்பலிலிருந்து, பயணிகளை மீட்கும் பணி தொடர்கிறது.

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 1,300 சுற்றுலா பயணிகளுடன் புறப்பட்ட நார்வே கப்பல், கடல் சீற்றம் காரணமாக .இயந்திரக் கோளாறால் அவதிக்குள்ளானது.

இதையடுத்து பாறைகளில் சிக்கி உயிரிழப்பதை தவிர்க்க ஹஸ்டட்விகா பே அருகே கப்பல் வந்ததும், அபாய ஒலி எழுப்பப்பட்டது.

அதைத்தொடர்ந்து, கப்பலிலிருந்தவர்களை மீட்பதற்காக 5 ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் அங்கு விரைந்தன. ஒவ்வொரு பயணிகளாக கப்பலிருந்து வெளியேற்றிய மீட்பு குழுவினர், இதுவரை 180 பேரை ஹெலிகாப்டர் மூலம் கரை சேர்த்துள்ளனர்.

தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில், பழுதான .இயந்திரங்களை சரிசெய்து கப்பலை துறைமுகம் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தேர்தல் களத்தில் வலம் வரும் நட்சத்திர பேச்சாளர்கள் யார்?யார்?

தமிழகம், புதுச்சேயில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

Recent Posts