சேலம் சீலநாயக்கன்பட்டியில் ஒரே மேடையில் ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் திமுக வேட்பாளர் எஸ்.ஆர். கார்த்திகேயனை ஆதரித்தும் கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் பொன். கவுதம சிகாமணியை ஆதரித்தும் ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி பரப்புரை நிகழ்ச்சி வருகின்றனர்.
அப்போது ராகுல் காந்தி பேசியது பின்வருமாறு :
*தமிழ்நாடு தமிழர்களால் ஆளப்பட வேண்டும்;தமிழ்நாடு நாக்பூரில் இருந்து இயக்கப்பட வேண்டும் என்று பாஜகவினர் சொல்கிறார்கள்.
*நீட் தேர்வு தேவையா? தேவையில்லையா என்பதை மாநிலங்கள் முடிவு செய்ய தேர்தல் அறிக்கையில் உறுதியளித்திருக்கிறோம்
* பணக்காரர்கள், தொழிலதிபர்களுடன் மோடி அமர்ந்து பார்த்திருப்பீர்கள்…
* விவசாயி, தொழிலாளியோடு அமர்ந்து இருப்பதை நீங்கள் பார்த்து இருக்க முடியாது…
* பண மதிப்பிழப்பால் திருப்பூரில், தொழில்களும், காஞ்சிபுரத்தில் பட்டு நெசவும் அழிந்துள்ளன
*மக்களின் குரலை கேட்கிறோம்; கருத்துப் பரிமாற்றங்களை கேட்கிறோம்
*தமிழ்நாட்டில் இன்னொரு அனிதா தற்கொலை செய்வதை காங்கிரஸ் விரும்பவில்லை
*கலைஞர் சாதாரண மனிதர் அல்ல, தமிழர்களின் குரலை ஓங்கி ஒலித்த தலைவர் அவர் என்று ராகுல் புகழாரம்.
*கோடிக்கணக்கான மக்களின் கருத்தை அறிந்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
* தமிழக அரசு கருணாநிதியை அவமானப்படுத்தியதன் மூலம், தமிழர்களையே அவமானப்படுத்தியதாக எண்ணுகிறேன்
* நாட்டின் 15 பெரிய பணக்காரர்களுக்கு 3 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் கடனை மோடி தள்ளுபடி செய்துள்ளார்.