இந்திய சுதந்திர வரலாற்றில் முக்கியமான நாளாகும். ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்து 100 ஆண்டுகளாகிவிட்டன.
1919ம் ஆண்டு ஏப்ரல் 13ம்தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன்வாலாபாக் மைதானத்தில் ஒரு அமைதியான பொதுக்கூட்டம் நடந்தது.
இந்தியர்களின் பேச்சுரிமை உள்பட அனைத்து உரிமைகளையும் பறிக்கும் கொடிய ரவுலட் சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் கைது செய்யப்பட்டு, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பலர் கொல்லப்பட்டனர்.
ஜெனரல் ரொனால்டு டயர் என்ற வெள்ளைக்காரன் தலைமையில் வந்த ஆங்கிலேய ராணுவ படை, கூடியிருந்தவர்களை கலைந்து செல்லும்படி எச்சரிக்கை விடுக்காமல், பீரங்கியால் சுட்டு வீழ்த்தினர்.
10 நிமிட நேரம் 1,650 ரவுண்டுகள் சுட்டப்பிறகுதான் பீரங்கிகள் ஓய்ந்தன.
இந்த சம்பவத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிர்இழந்தனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.
100 ஆண்டுகள் ஆனாலும், அன்று உயிர் இழந்தவர்களின் ரத்தம்தான் இந்திய நாட்டின் சுதந்திரத்துக்கு உரமிட்டது.
சுதந்திரத்துக்காக உயிர்நீத்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜாலியன்வாலாபாக் தியாகிகளுக்கு கண்ணீரோடு அஞ்சலி செலுத்தும் கடமை இன்றைய தலைமுறைக்கு இருக்கிறது.
கடந்த 100 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டிஷ் அரசு மன்னிப்பு கோரியுள்ளது.
இந்நிலையில் இன்று பிரிட்டிஷ் துாதர் ஜாலியன்வாலாபாக் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார்.