சித்திரைத் திருநாளை முன்னிட்டு தஞ்சாவூர் பெரியகோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முக்கிய நிகழ்வான தேரோட்டத்தை இன்று மேலராஜவீதியில் மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் வடம் பிடித்து தொடங்கிவைத்தனர்.
மங்கள வாத்தியங்கள் இசைக்க, அலங்கரிக்கப்பட்ட தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
பக்தர்கள் வசதிக்காக மேலராஜவீதி, வடக்கு ராஜவீதி, தெற்கு ராஜவீதி உட்பட 14 இடங்களில் தேர் நிறுத்தப்பட்டது.