மம்தாவின் 40 எம்எல்ஏக்களும் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள்: தரை ரேட்டுக்கு இறங்கிப் பேசும் பிரதமர் மோடி

மேற்குவங்கத்தில் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, திரிணாமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தேர்தல் முடிவுக்காக காத்திருப்பதாகவும், அதற்கு பின்னர் மம்தாவைக் கைவிட்டு விடுவார்கள் என்றும் கூறியிருக்கிறார்.

மேற்கு வங்கமாநிலம் செராம்பூரில் பேசிய பிரதமர் மோடி, மே 23 ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக இருப்பதாகவும், இதில் நாடு முழுவதும் தாமரையே மலரும் என்றும் கூறியுள்ளார். தற்போது மம்தா கட்சியின் 40 எம்எல்ஏக்கள் தன்னுடன் தொடர்பில் இருப்பதாகவும், தேர்தல் முடிவுக்குப் பின்னர் இவர்கள் அனைவரும் பாஜக ஆதரவாளர்களாக மாறுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவியில் இருக்கும் ஒருவர், இந்தியத் தேர்தல் வரலாற்றிலேயே பிரதமர் பதவியில் இருக்கும் ஒருவர், லோக்கல் கவுன்சிலர் ரேஞ்சுக்கு இந்த அளவுக்கு தரைமட்டமாக மிரட்டல் விடுத்துப் பேசுவது இதுவே முதல் முறை என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

வெற்றி வாய்ப்பு குறித்த சந்தேகம் பிரதமர் மோடிக்கு வலுத்து விட்ட பதற்றத்தினாலேயே அவர் இவ்வாறு பேசத் தொடங்கி இருப்பதாக எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர்.

பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு எதிராக காங்., கட்சி உச்சநீதிமன்றத்தில் முறையீடு..

திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 40 பேர் எங்களுடன் தொடர்பில் உள்ளனர் : பிரதமர் மோடி

Recent Posts