https://twitter.com/savukku/status/1123444259305271298
https://twitter.com/savukku/status/1123440281469190144
அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லும் சாக்கில் நடிகர் விஜயை கேவலமாக கலாய்த்து தமது ட்விட்டர் பக்கத்தில் சவுக்கு சங்கர் பதிவிட்டிருக்கிறார். இதனைப் பார்த்து கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள், ஒரு நடிகரை வாழ்த்த மற்றொரு உச்சநடிகரை அசிங்கப்படுத்த வேண்டுமா எனக் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதுகுறித்து விஜய் ரசிகர்கள் நம்மைத் தொடர்பு கொண்டு கூறியதாவது:
அஜித்திற்கு பிறந்த நாள் வாழ்த்ணதுக் கூறுவதற்காக, தேவையில்லாமல் சவுக்கு சங்கர் விஜயை வம்புக்கிழுத்திருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் சர்ச்சைகளையும், பரபரப்பையும் ஏற்படுத்தும் பதிவுகளுக்கு பெயர் பெற்றவர் சவுக்கு சங்கர்.
கடந்த 2008 -2009 காலக்கட்டங்களில் திமுகவுக்கு எதிராக தமது சவுக்கை சுழற்றி சமூகவலைத்தளங்களில் கவனத்தை பெற்றவர் இவர்.
சவுக்கு சங்கரை ஜெயலலிதா ஆதரவாளர் என்பதை விட கருணாநிதி எதிர்ப்பாளர் என்றே கூறலாம்.
தமிழக அரசியலில் கருணாநிதியை எதிர்ப்பவர்களின் உளவியல் தன்மை மற்றும் அரசியல் பின்னணி பற்றி விளக்கத் தேவையில்லை. சோ முதல் தமிழருவிமணியன், மாலன் வரை அதற்கு பல உதாரணங்களை அடிக்கிக் கொண்டே போகலாம்.
அவர்களைப் போன்ற அரசியல் பார்வையும் (அதை அரசியல் பார்வை என்று கூறலாமா…) சிந்தனையும் கொண்டவர்தான் சவுக்கு சங்கர்.
திமுகவுக்கு எதிராக குறிப்பாக 2ஜி வழக்கு குறித்து, மத்திய தலைமைத் தணிக்கையாளர் அறியாத விவரங்களையெல்லாம் புட்டுப்புட்டு வைத்து பக்கம் பக்கமாக ப்ளாக்கில் எழுதியவர் இவர்.
கடைசியில் அது வெறும் புரளி எனத் தெரிய வந்த பின்னரும், திமுகவைச் சிறுமைப் படுத்த வேறு காரணங்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டே இருப்பவர். இப்போது தினகரனை ஆதரித்து தீவிரமாக சமூக வலைத்தளங்களில் இயங்கி வருகிறார்.
இதுதான் சவுக்கு சங்கரின் அரசியல் தூய்மைக்கான அடையாளம்.
சமூகவலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் புழங்கும் பலரும், சவுக்கு சங்கரின் அரசியல் ஆரூடங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருவது வாடிக்கையான வேடிக்கை.
இவர் தனக்குப் பிடித்த நடிகர் அஜித்திற்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.
அதில் யாருக்கும் பிரச்சினை இல்லை. அதற்கு விஜயை வீணாக வம்புக்கிழுத்து, சிறுமைப் படுத்தி இருப்பதுதான் எனைப் போன்ற விஜய் ரசிகர்களுக்கு வேதனை தரும் ஒன்று.
அஜித்திற்கு அவர் எவ்வாறு பிறந்த நாள் வாழ்த்துக் கூறியிருக்கிறார் தெரியுமா…
“அஜித் விஜயைப் போல் இல்லை. அடிமட்டத்தில் இருந்து தானாக முன்னேறியவர். விஜய் ஆரம்ப காலங்களில் தனது தந்தையின் உதவியுடன் ஆபாசப் படங்களில் நடித்து முன்னேறியவர். அஜித் கருணாநிதி 89 வயதாக உயிருடன் தெம்பாக இருக்கும் போதே துணிச்சலுடன் அவரை எதிர்த்தவர். விஜய் தனது படம் ரிலீஸ் ஆவதற்காக ஜெயலலிதாவைப் போய் சந்தித்தவர். ஏசி சண்முகத்திடம் தனக்கு டாக்டர் பட்டம் வழங்குமாறு கேட்டவர். அஜித் இதுபோல ஒரு போதும் செய்தவர் அல்ல.”
என்றெல்லாம் குறிப்பிட்டிருக்கிறார். தனக்கு பிடித்த ஒரு நடிகருக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்வதென்றால் அதை நேரடியாக சொல்ல வேண்டியதுதானே… உச்சத்தில் இருக்கும் மற்றொரு நடிகரை சிறுமைப் படுத்தித்தான் அதைச் சொல்ல வேண்டுமா… இப்படியும் ஒரு பிறந்தநாள் வாழ்த்து… பெரிய அரசியல் பார்வையாளர் என மதிக்கப்படும் சவுக்கு சங்கர் இப்படிச் செய்திருப்பது வருத்தத்தை அளிக்கிறது.
ஆனால், அவருடைய முந்தைய செயல்களைப் பார்க்கும் போது அவர் இப்படிச் செய்திருப்பதில் வியப்பு எதுவும் ஏற்படவில்லை. சோ, மாலன் வகையறாக்கள் அப்படித்தானே செய்வார்கள்…
என்று கொந்தளிக்கிறார் அந்த விஜய் ரசிகர்.