பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக அமைக்கப்பட்ட மூன்று உச்சநீதிமன்ற நீதிபதிகளின் விசாரணைக் குழுவின் முன்பு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீது பாலியல் புகார் தெரிவித்ததையடுத்து நீதிபதிகள் போப்டே, இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது.
ஆனால் பாதிக்கப்பட்ட பெண் தமக்கு இக்குழுவால் நீதி கிடைக்கும் என்று நம்பிக்கையில்லை என்று கூறி திடீரென பின்வாங்கினார்.
ஆயினும் விசாரணையைத் தொடர நீதிபதிகள் குழு முடிவு செய்துள்ளது. இதனால் மூவர் குழு முன்பு ஆஜரான ரஞ்சன் கோகய் தம் மீதான பாலியல் புகார்கள் போலியானவை என்று விளக்கம் அளித்தார்.
நீதித்துறையை மிரட்ட சதித்திட்டம் தீட்டப்படுவதாகவும் ரஞ்சன் கோகய் குறிப்பிட்டார்.