சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின: 91% தேர்ச்சி

 

சி.பி.எஸ்.இ. 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. சி.பி.எஸ்.இ. 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற இணைய தளத்தில் காணலாம்.

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை எழுதியுள்ள மாணவ, மாணவியர் தங்களது தேர்வு முடிவைக் காண கீழே தரப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கவும்…

 Secondary School Certificate Examination ( Class X ) 2019  –  Announced on 6th May 2019

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வில் 91 புள்ளி ஒன்று  சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி முதல் மார்ச் 29 ஆம் தேதி வரை 6 ஆயிரம் மையங்களில் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது.

நாடு முழுவதும் சுமார் 18 லட்சத்து 27 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணியளவில் வெளியிடப்பட்டன.

கேரளாவை சேர்ந்த பாவனா என் சிவதாஸ் என்ற மாணவி 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று நாட்டிலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார். சிபிஎஸ்இ இணையதளங்கள் மற்றும் UMANG மொபைல் ஆப், எஸ்எம்எஸ் வாயிலாகவும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

அதிகபட்சமாக திருவனந்தபுரம் மண்டலத்தில் 99 புள்ளி எட்டு ஐந்து சதவீதம் பேரும், சென்னை மண்டலத்தில் 99 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மதிப்பெண் மறு மதிப்பீடு செய்ய வரும் 24 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை ஒரு பாடத்திற்கு 500 ரூபாய் கட்டணம் செலுத்தி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பபட்டுள்ளது.

கடந்தாண்டு தேர்ச்சி விகிதம் 86 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 91 சதவீதமாக உயர்ந்துள்ளது. நடப்பு ஆண்டில் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு முடிவுகள், கடைசி தேர்வு முடிந்த 38 நாட்களில் வெளியிடப்பட்டுள்ளது.

அதே போன்று கடந்த 2 ஆம் தேதி வெளியான சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும், கடைசி தேர்வு முடிந்த 55 நாட்களில் வெளியிடப்பட்டுள்ளது.