உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது தாம் அளித்த புகார் எந்த அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது எனத் தெரிவிக்க வேண்டும் என, புகார் அளித்த உச்சநீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் கோரியுள்ளார்.
நீதிபதி ரஞ்சன் கோகய்க்கு எதிரான புகார் குறித்து விசாரணை நடத்திய 3 நீதிபதிகள் அடங்கிய குழுவினர், புகாரில் முகாந்திரம் இல்லை என்று கூறி தள்ளுபடி செய்தனர்.
விசாரணை அறிக்கையை பகிரங்கமாக வெளியிட முடியாது என்று கூறி, தலைமை நீதிபதி மற்றும் அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் நீதிபதிக்கு மட்டும் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் புகார் அளித்த பெண் விசாரணைக்குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், எந்த அடிப்படையில், தனது புகார் தள்ளுபடி செய்யப்பட்டது என்பதை அறிந்து கொள்ளும் உரிமை தனக்கு இருப்பதாக கூறியுள்ளார்.
விசாரணை அறிக்கையின் நகலை புகார் தாரரான தனக்கு வழங்க மறுப்பது சட்ட விதிமுறைகளை மீறும் செயல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.