திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சோனியா காந்தி கடிதம்…

தேர்தல் முடிவுக்கு பிந்தைய நிலை குறித்து ஆலோசிக்க வரும் 23ந் தேதி நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியாகாந்தி கடிதம் எழுதியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று, 7 கட்ட தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் 23ந் தேதி எண்ணப்படுகின்றன. இதையடுத்து, தேர்தல் முடிவுக்கு பிந்தைய நடவடிக்கையில் காங்கிரஸ் கட்சி இறங்கியுள்ளது.

தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம் ஆகிய 4 கட்சிகள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள நிலையில்,

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பேச்சு நடத்தி வருகின்றனர்.

பல்வேறு கட்சித் தலைவர்களை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அண்மையில் சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்நிலையில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு சோனியாகாந்தி அனுப்பி உள்ள கடிதத்தில்,

“டெல்லியில் வருகிற 23-ந் தேதி ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளதாக கூறியுள்ளார். தேர்தலுக்கு பிந்தைய அரசியல் நிலைப்பாடு பற்றி அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது

என்றும், அதில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்றும்,சோனியா தெரிவித்துள்ளார்.

பிஜூ ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி ஆகிய கட்சிகளுக்கும் இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அதே நாளில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாய கடன், கல்விக் கடன் ரத்து : மு.க.ஸ்டாலின்..

கடைசி கட்ட மக்களவைத் தேர்தல்: பரப்புரை நாளையுடன் ஓய்வு..

Recent Posts