கோட்சேவை தேசபக்தர் என்ற கூறிய, பிரக்யா சிங் பகிரங்க மன்னிப்புக் கோரினார் ..

மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதூராம் கோட்சேவை தேசபக்தர் என்ற கூறிய, பிரக்யா சிங் தாக்கூர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுள்ளார்.

மத்திய பிரதேசத்தின், போபால் தொகுதி பாஜக வேட்பாளராக, பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர் நிறுத்தப்பட்டுள்ளார்.

மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவர், நாதூரம் கோட்சே., என்றும்., எப்போதும்., தேசபக்தர் என்றார்.

கோட்சேவை தீவிரவாதி என்பவர்களுக்கு, தேர்தல் மூலம், தக்க பாடம் கொடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார். இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்த விவகாரம் குறித்து டெல்லியில் பேசிய, பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்மராவ், கோட்சே குறித்த பிரக்யா சிங் தாக்கூரின் கருத்து, ஏற்புடையது அல்ல என்றும், உடனடியாக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இதையடுத்து, மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதூராம் கோட்சேவை தேசபக்தர் என்று கூறியதற்கு, பகிரங்க மன்னிப்புக் கோருவதாக, பிரக்யா சிங்
தெரிவித்திருக்கிறார். மேலும், தனது கருத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும், பிரக்யா சிங் கூறியிருக்கிறார்.

அரவக்குறிச்சியில் பரப்புரையின் போது கமல் மீது செருப்பு வீச்சு..

ஓ.பி.எஸ். மகன் எம்.பி. என பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு : பொதுமக்கள் அகற்ற கோரிக்கை

Recent Posts