திருவாரூர் – காரைக்குடி வழித்தடத்தில் மீண்டும் ரயில் சேவை தொடக்கம்..

திருவாரூர் – காரைக்குடி இடையே 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரயில் சேவை இன்று தொடங்கியது.

திருவாரூரில் இருந்து காரைக்குடி வரை அகல ரயில் பாதையாக மாற்றும் பணிக்காக ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

அகல ரயில் பாதை பணி நிறைவடைந்ததை அடுத்து, ரயில் சேவையை நாகை எம்.பி. செல்வராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த ரயில் திருவாரூரில் இருந்து மாங்குடி, மாவூர், திருநெல்லிக்காவல், ஆலத்தம்பாடி, மணலி, திருத்துறைப்பூண்டி, தில்லைவிளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடி செல்கிறது.

காலை 8.15 மணிக்கு திருவாரூரில் புறப்படும் இந்த ரயில் மதியம் 2.15 மணிக்கு காரைக்குடியை சென்றடையும். காரைக்குடியில் இருந்து மீண்டும் மதியம் 2.30 புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு திருவாரூர் வந்தடையும்.

பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் சோனியா காந்தி…

தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும் : செங்கோட்டையன்…

Recent Posts