புதுச்சேரி : காவல்துறை பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..

புதுச்சேரி காவல்துறையில், காவலர் பணியிடங்களுக்கான வயது வரம்பு உயர்த்தப்பட்ட நிலையில், தகுதியுள்ளவர்கள் வருகிற10 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, புதுச்சேரி காவல்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், காலியாக உள்ள 390 காவலர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் ஏற்கனவே பெறப்பட்ட நிலையில்,

காவலர் பணிக்கான வயது உச்சவரம்பை 22 லிருந்து 24 ஆக தற்போது உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தகுதியுள்ளவர்கள் வருகிற 10 ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 9 ஆம் தேதி வரை, police.py.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தி திணிப்பை எதிர்த்து தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம்.

மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பை ஏற்க முடியாது: நல்லக்கண்ணு

Recent Posts