60 வயதை கடந்த விவசாயிகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிவித்துள்ளது.
விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் எழுத்து மூலமாக அளித்த அறிவிப்பில் அனைத்து சிறிய மற்றும் விளிம்பு நிலை விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
இதன்படி 60 வயதை கடந்த தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு மாதம் மூன்றாயிரம் ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படும்.
இத்திட்டத்தில் 18 வயது முதல் 40 வரையிலான விவசாயிகள் சேர்க்கப்படுவார்கள். இத்திட்டத்தில் 29 வயதான ஒரு விவசாயி சேருகிற போது மாதம் 100 ரூபாயை செலுத்த வேண்டும்.
அதே அளவு தொகையை மத்திய அரசு செலுத்தும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.