2019-2020ம் மத்திய பட்ஜெட் : மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்..

மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.

மத்தியில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தொடர்ந்து 2வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.

இந்நிலையில், முதல் பெண் நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன், தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இதற்கு முன்பு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, 1970ல் கூடுதல் பொறுப்பாக நிதித்துறையை கவனித்துள்ளார். அப்போது அவர் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

மத்திய பட்ஜெட் மீது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை நிகழ்த்தி வருகிறார். மீண்டும் ஒருமுறை பாஜக அரசு தேர்ந்தெடுக்கப்பட்டதை குறிப்பிட்டு உரையை ஆரம்பித்தார்.

அப்போது பேசிய அவர், புதிய இந்தியாவை உருவாக்க இந்த புதிய அரசு பதவி ஏற்றுள்ளது என்றும் வரலாற்றிலேயே அதிகமாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பதிவானது என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

முன்னதாக மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார்.

மத்தியில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தொடர்ந்து 2வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தேசத் துரோக வழக்கில் தண்டனை பெற்ற வைகோவிற்கு ஜாமீன்..

பெட்ரோல்,டீசல் லிட்டருக்கு ஒரு ரூபாய் கூடுதல் வரி : மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் அறிவிப்பு..

Recent Posts