இங்கிலாந்தின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு..

இங்கிலாந்தின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார் .

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறும் விவகாரத்தில் நாடாளுமன்ற ஒப்புதலைப் பெறுவதில் தோல்வியடைந்த தெரசா மே பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே புதிய பிரதமர் ஆவார் என்ற நிலையில் அதற்கான தேர்தல் நடைபெற்றது.

இதில் இங்கிலாந்தின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜான்சனும், தற்போதைய வெளியுறவு அமைச்சர் ஜெராமி ஹன்ட்டும் போட்டியிட்டனர்.

இதில் கன்சர்வேடிவ் கட்சியின் சுமார் 2 லட்சம் உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் போரீஸ் ஜான்சன் 92513 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

புதுச்சேரி : உள்ளாட்சி தேர்தல் ஆணையர் நியமனம்..

சூர்யாவுக்கு ஆதரவாக நடிகர் சத்யராஜ் வீடியோ வெளியிடு…

Recent Posts