முதல்வரைத் தொடர்ந்து அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திரபாலாஜி அமெரிக்கா பயணம்…

முதல்வரைத் தொடர்ந்து அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திரபாலாஜி அமெரிக்கா பயணம் மேற்கொள்கின்றனர்

தகவல் தொழில்நுட்ப துறையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அமெரிக்காவில் போடப்பட உள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர், சான்பிரான்சிஸ்கோவில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட உள்ளதாகவும்,

அதுகுறித்த விவரங்களை முதலமைச்சர் வெளியிடுவார் என்றும் தெரிவித்தார்.

அதே போன்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜியும், அமெரிக்காவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடனான பயணத்தில் இணைகிறார்.

அமெரிக்கா செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர், அமெரிக்காவில் சைடெக் நிறுவனத்தின் செயல்பாடுகளை அறியவும்,
கால்நடைகள் குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு, அங்குள்ள கால்நடைகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள், பராமரிப்பு குறித்த ஆய்வினை மேற்கொள்ளவும் உள்ளதாக கூறினார்.

காரைக்கால் மேற்கு புறவழிச்சாலைக்கு கருணாநிதி பெயர்: ஆளுநர் கிரண்பேடி அனுமதி

தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி குரூப் – 4 தேர்வு தொடங்கியது…

Recent Posts