தமிழகத்தின் 35வது மாவட்டமாக உதயமானது திருப்பத்தூர் மாவட்டம். திருப்பத்தூர் தனியார் பள்ளியில் நடைபெறும் விழாவில் புதிய மாவட்ட பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக உருவாகியிருக்கும் திருப்பத்தூர் இன்று முதல் நிர்வாக ரீதியில் பணிகளை தொடங்குகிறது.
19ம் நூற்றாண்டில் வேலூர், சேலம், ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய மாவட்டத்தின் தலைநகராக திருப்பத்தூர் இருந்துள்ளது.
திருப்பத்தூர் சாராட்சியார் அலுவலகத்தில் செயல்பட்டு வந்த கட்டடத்தில் தான் ஆங்கிலேயர் அரசின் போது திருப்பத்தூர் மாவட்ட தலைமையிடம் இருந்தது.
1989ம் ஆண்டில் திருவண்ணாமலை சம்பவராயர் மாவட்டம் வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் என 2 ஆக பிரிக்கப்பட்டது திருப்பத்தூர்.வட ஆற்காடு அம்பேதகர் மாவட்டம் 1996ம் ஆண்டில் வேலூர் மாவட்டம் ஆனது.
தற்போது, திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், நாட்டறம்பள்ளி ஆகிய வட்டங்களை ஒருங்கிணைத்து திருப்பத்தூர் என்ற மாவட்டம் உதயமானது.
85 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வேலூர் சென்று திரும்ப ஒரு நாள் முழுவதும் செலவாகும் என்ற நிலையில் திருப்பத்தூர் தலைமையில் உதயமாகியுள்ள திருப்பத்தூர் மாவட்டத்தை மக்கள் வரவேற்கின்றனர்.
வணிக வரித்துறை அமைச்சர் வீரமணி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோசபர் கபில் ஆகியோரின் தொகுதிகளான ஜோலார்பேட்டை வாணியம்பாடி ஆகியவை இடம்பெற்றுள்ளன.
திருப்பத்தூர் மாவட்டத்தில் விவசாயமே பிரதான தொழில், வாணியம்பாடி ஆம்பூர் ஆகிய பகுதிகளில் பதப்படுத்தப்படும் தோல்கள் உலகத்தரம் வாய்ந்தவை.
வரலாற்றிலும், புவியியலிலும் பெருமைகளை சுமந்திருக்கும் திருப்பத்தூரை புதிய மாவட்டமாக அறிவித்து அதற்கான பணிகளை முதல்வர் மற்றும் துணை முதல்வர் இன்று துவக்கி வைத்தனர்.
இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
விழா மேடையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுக்கு முதல்வர் மற்றும் துணைமுதல்வர் மலர்த்தூவி மரியாதையை செலுத்தி பின் தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், நாட்றம்பள்ளி ஆகிய தாலுகாக்கள் அதில் இடம் பெறுகிறது. புதிதாக வாணியம்பாடி வருவாய் கோட்டம் உருவாகிறது.
இதில் வாணியம்பாடி, ஆம்பூர் தாலுகாக்கள் இடம் பெறுகிறது. அதேபோல், 36வது மாவட்டமாக ராணிப்பேட்டை இன்று உதயமாக உள்ளது.
இந்த புதிய மாவட்டத்தில் ராணிப்பேட்டை, அரக்கோணம் கோட்டங்கள் மற்றும் ஆற்காடு, வாலாஜா, நெமிலி உள்ளிட்ட வட்டங்கள் அடங்கியுள்ளன.
இந்த விழா இன்று பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்கவுள்ளது.