தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் நாளையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது வரும் 27 மற்றும் 30 தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குபதிவு நடைபெறவுள்ளது.
பொதுவாக உள்ளாட்சி தேர்தல் என்றாலே திருவிழாதான் கிராமங்கள் தோறும் கொண்டாடங்கள் தொடங்கி விட்டன். தேர்தல் முடிவு வரும் வரை குடி மக்கள் கொண்டாடத்தில் உள்ளார்கள்.
அண்ணன் தம்பி எதிர்த்து நிற்பதும் அக்கா தங்கை எதிர்த்து நிற்பதும் சர்வசாதரணம். பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீட்டால் வெட்கப்படும் பெண்வேட்பாளர்கள்.
ஊராட்சி தேர்தல் பொதுவாக அரசியல் கட்சிகளுக்கு பெரும்பாலும் முக்கியத்துவம் கிடைப்பதில்லை. கட்சி மாறி உறவுக்காக இங்கே பலர் வாக்கு கேட்பார்கள்.
வரும் 25 தேதி முதல் டhஸ்மார்க் கடைகள் மூடப்படுவதால் சரக்குகள் இப்போதே பதுக்கப்படுகின்றன. வைட்டமின் “ப” புகுந்து விளையாடுகிறது.
மாநகராட்சி நகராட்சி மக்கள் ஏக்கத்தில் வேடிக்கை பார்கின்றனர்.