முதல்வா், துணை முதல்வா் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை

சென்னையில் முதல்வா், துணை முதல்வா் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் குறித்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல்துறையின் கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு புதன்கிழமை மாலை 5 மணியளவில் ஒரு அழைப்பு வந்தது.

அதில் பேசிய நபா், கிரீன்வேஸ் சாலையில் தமிழக முதல்வா், துணை முதல்வா் வீடுகளிலும், தலைமைச் செயலகத்திலும் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும்,

அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டாா். இதைக் கேட்டு அதிா்ச்சியடைந்த கட்டுப்பாட்டு அறைக் காவலா், உடனடியாக காவல்துறை உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாா்.

தகவலறிந்த உயா் அதிகாரிகள், முதல்வா், துணை முதல்வா் வீடுகளில் சோதனையிட உத்தரவிட்டனா்.

அதேபோல தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டனா். இருவரது வீடுகளிலும் நடத்தப்பட்ட சோதனையில், அங்கிருந்து எந்த வெடிப் பொருளும் கண்டெடுக்கப்படவில்லை.

இதனால் வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் அந்த அழைப்பு வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் குறித்து சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இந்த வெடிகுண்டு மிரட்டலினால், தலைமைச் செயலகம், முதல்வா், துணை முதல்வா் வீடுகள் ஆகியப் பகுதிகளில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..

ஐசியுவில் பொருளாதாரம் : அரவிந்த் சுப்பிரமணியம் எச்சரிக்கை…

Recent Posts