சென்னை வானிலை ஆய்வு மையத்தில் தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அக்டோபர் முதல் டிசம்பர் 31 வரையிலான காலகட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் இயல்பைவிட அதிகமாக 2 சதவிகிதம் மழை பெய்துள்ளதாகக் கூறினார்.
சென்னையை பொறுத்தவரை 759 மில்லிமீட்டர் மழை பெய்ய வேண்டிய நிலையில் 633 மில்லிமீட்டர் மட்டுமே மழை பெய்துள்ளதாகவும் இது 17 சதவிகிதம் குறைவு என்றும் தெரிவித்தார்.
வடகிழக்குப் பருவமழை காலகட்டத்தில் அரபிக்கடலில் 3, வங்கக் கடலில் 5 என மொத்தம் 8 புயல்கள் உருவாகியுள்ளன.
1996-க்கு பின்னர் இந்திய பெருங்கடலின் இருமுனைப் பகுதியில் இந்த ஆண்டுதான் அதிகமாக மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் இன்னும் 4 நாட்களுக்கு மழை தொடரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.