ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் : அதிக இடங்களில் திமுக வெற்றி..

டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில், 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக நடந்த தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான முடிவுகள் நேற்று (வியாழக்கிழமை) முதல் வெளியாகி வருகின்றன.

வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை பல இடங்களிலும் இன்னமும் முடியவில்லை.

ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் முடிவுகளில் இதுவரை மொத்தமுள்ள 5067 இடங்களில், திமுக கூட்டணி 2301 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாகவும், அதிமுக கூட்டணி 2140 இடங்களில் வென்றுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேபோல் மாவட்ட கவுன்சிலர் தேர்தல் முடிவுகளில் மொத்தமுள்ள 515 இடங்களில், இதுவரை முடிவுகள் வெளியான 478 இடங்களில், அதிமுக கூட்டணி 239 இடங்களையும், திமுக கூட்டணி 268 இடங்களையும் வென்றுள்ளன.

அமமுக கட்சி 3 மாவட்ட உறுப்பினர், 90-க்கம் மெற்பட்ட ஒன்றிய கவுன்சிலர் பதவிகளையும் கைப்பற்றியுள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..

நெல்லை கண்ணன் என்ன தீய செயலை செய்தார்?: ப.சிதம்பரம் கருத்து

Recent Posts