பெல் உள்பட 6 நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்..

பாரத மிகுமின் நிறுவனமான பெல் நிறுவனம், எம்எம்டிசி, ஒடிசாலில் உள்ள சுரங்க நிறுவனக் கழகம் உள்ளிட்ட 6 பொதுத்துறை நிறுவனங்களின்  பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கிள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடந்த கூட்டத்தில் கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  பெல் உள்பட 6 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி பாரத மிகுமின்  நிறுவனத்தின் (பெல்) 0.68 சதவீதம், எம்எம்டிசி நிறுவனத்தின் 49 சதவீதம், தேசிய கனிமவள மேம்பாட்டுக் கழகம்(என்எம்டிசி), ஒடிசா சுரங்கக் கழகம் 20 சதவீதம், ஒடிசா முதலீட்டுக் கழகழம் 12 சதவீதம், எம்இசிஓஎன் 0.68 சதவீதம் பங்குகளை விற்பனை செய்ய உள்ளது.

ஒடிசா முதலீட்டுக் கழகழகத்தில் இருந்து 27 சதவீதப் பங்குகளையும், ஒடிசா சுரங்கக் கழகத்தில் இருந்து 27 சதவீதப் பங்குகளையும் விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் நீலாஞ்சல் ஸ்பாட் நிறுவனத்தில் பங்குகள் வைத்திருக்கும் பங்குதாரர்களும் தங்கள் பங்குகளை விற்பனை செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த பங்குகளின் விற்பனையில் இருந்து கிடைக்கும் நிதி சமூக மேம்பாடு, வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என கூறினார்.

தனியார் மயமாக்கலை எதிர்த்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பெல் உள்பட மத்திய அரசின் 6 பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது தொழிற்சங்கத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொழிற்சங்கங்கள் போராட்டம்: புதுச்சேரியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு; பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடவில்லை..

உலகில் மிக வேகமாக வளரும் நகரங்களில் 30வது இடத்தில் திருப்பூர்: முதலிடத்தில் மலப்புரம்;

Recent Posts