தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு..

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.128 உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

புத்தாண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், பொங்கல் பண்டிகையை ஒட்டி நகை வாங்க அதிகம் செலவிட வேண்டியிருக்கிறதே என்ற கவலையில் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.3,801-க்கும் சவரன் ரூ. 30,408-க்கும் விற்பனையானது.

இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ஒரு சவரன் ரூ.30,624-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிராமிற்கு ரூ.16 உயர்ந்து ரூ.3,828-க்கு விற்பனையாகிறது. அதேசமயம் வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது.

சில்லறை விற்பனையில் ரூ.30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 10 காசுகள் குறைந்து ரூ.50.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நிர்பயா வழக்கு: முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்

தஞ்சை பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்திட மு.க.ஸ்டாலின் கோரிக்கை..

Recent Posts