தமிழகத்தில் வீட்டில் தனிமைப்படுத்தி இருப்போர் எண்ணிக்கை 4253 ஆக உயர்வு…

தமிழகத்தில் வீட்டில் தனிமைப்படுத்தி இருப்போர் எண்ணிக்கை 4253 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. உலகம் முழுவதும்கோவிட்-19 வைரஸ் பரவி வருவதால்

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளை பரிசோதனை செய்வதற்காக சென்னை, திருச்சி, மதுரை, கோவை விமான நிலையங்களில் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழுவினர் பயணிகளை பரிசோதனை செய்யும்போது யாருக்காவது, காய்ச்சல், இருமல்,தும்மல், சளி பிரச்னை இருந்தால், அவர்கள் உடனடியாக அரசுமருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.

வைரஸ் அறிகுறிகள் இல்லாதவர்கள், சென்னை, திருச்சி, மதுரை, கோவை பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் 24 மணி நேரம் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.

அதன்பின், அவர்கள் 14 நாட்கள் முதல் 28 நாட்கள் வரை வீட்டுக் கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர்.

இதன்படி தமிழகத்தில் வீட்டில் தனிமைப்படுத்தி இருப்போர் எண்ணிக்கை தற்போது 3481லிருந்து 4253 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மட்டும் சுமார் 800 தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அசேமயம் வைரஸ் அறிகுறிகள் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 39லிருந்து 32ஆக குறைந்துள்ளது.

தமிழகத்தில் கரோனாவுக்கு இதுவரை 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் குணமடைந்து மருத்துவனையில் இருந்து வீடுதிரும்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறன்று காலை 7 மணி முதல் இரவு 9 வரை அரசு பேருந்துகள் இயங்காது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஜெர்மனியின் பவேரியா மாநிலம் அறிவித்ததைப் போல் தமிழ்நாடு அரசு முழுமையான ஊரடங்கை அறிவிக்க வேண்டும்: ப.சிதம்பரம் வலியுறுத்தல்

Recent Posts