தமிழகத்தில் 144 தடை உத்தரவு நீட்டிப்பா…?

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 24 -ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தொற்று பரவலை தடுக்க, தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் வீடடங்கியுள்ளனர்.

24 மணி நேரமும் 70 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளுக்காக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை 101 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த 4 -ம் தேதி நாளிட்ட அந்த அரசாணையில், ஏப்ரல் 30 தேதிவரை போலிசாருக்கு உணவுப்படி (Feeding Charge) வழங்கப்படும் என்றும், அதற்காக 75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த அரசு ஆணையைக் குறிப்பிட்டு, தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை வரும் 30-ம் தேதி வரை நீட்டிக்க வாய்ப்புள்ளது என சில நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இது குறித்து வருவாய் பேரிடர் மேலாண்மை துறை மூத்த அதிகாரி ஒருவர் அளித்துள்ள விளக்கத்தில், ஊரடங்கு குறித்து சில நாளிதழ்களில் வெளியான செய்தி தவறு, இது நிதி ஒதுக்கீடு தொடர்பான அரசாணை மட்டுமே என்று குறிப்பிட்டார்.

மேலும், காவல், சுகாதாரம் ஆகிய துறை அதிகாரிகள் அனுப்பிய பரிந்துரை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை அப்படியே அரசு ஆணையில் குறிப்பிடுவது வழக்கம் என்றார்.

அதன் அடிப்படையிலேயே, கடந்த 4 -ம் தேதி இந்த அரசாணை வெளியிடப்பட்டது என்றார்.அதேபோல், 144 தடை உத்தரவை நீட்டிப்பது என்பது மாநில அரசுகளை கலந்து ஆலோசித்து, மத்திய அரசு எடுக்க வேண்டிய முடிவு.

அப்படி ஒருவேளை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால், அதற்கென தனி அரசாணை பிறப்பிக்கப்படும் என்றும் அந்த அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

ஒருவேளை அப்படி ஆணை பிறப்பிக்கப்பட்டால், அந்த ஆணையின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர்களும், காவல் ஆணையர்களும் ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பிப்பார்கள் என்று கூறினார்.

அதனால், மக்கள் குழப்பம் அடையாமல், ஊரடங்கை பின்பற்ற வேண்டும் என்றும், 144 தடை உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக அரசு உரிய நேரத்தில் தெளிவான அறிவிப்பை வெளியிடும் என்று அந்த உயர் அதிகாரி தெரிவித்தார்.

தமிழகத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு, புதிதாக 50 பேருக்கு கரோனா உறுதி: பீலா ராஜேஷ்..

சூப்பர் பிங்க் நிலவை இந்தியாவில் பார்க்க முடியுமா…

Recent Posts