ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது பற்றி அதிகாரிகளிடம் அனுமதி பெற தேவையில்லை; தகவல் தெரிவித்தாலே போதும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
அரசின் நிபந்தனைகளுடன் தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் நிவாரண பொருட்களை வழங்கலாம் என்று திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நிவாரண பொருட்கள் வழங்குவது குறித்து 48 மணி நேரத்திற்கு முன்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டும்,நிவாரண பொருட்கள் வழங்க ஓட்டுநர் உள்பட 4 பேர் மட்டுமே செல்ல வேண்டும்,
நிவாரணம் வழங்குவோர் முகக்கவசன், சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,
நிவாரணம் வழங்குவோர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை நீதிபதிகள் விதித்துள்ளனர்.