தெலுங்கானா மாநில அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை மாநிலத்தில் முழு அடைப்பு காலத்தை மே 7-வரை நீட்டிக்க முடிவு செய்தது மற்றும் திங்கள்கிழமை முதல் எந்தவொரு துறைக்கும் எந்தவிதமான தளர்வுகளையும் வழங்கக்கூடாது என்று அறிவித்துள்ளது.
நாடு தழுவிய பூட்டுதல் காலம் மே 3-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், தெலுங்கானா மாநில அமைச்சரவை மாநிலத்தில் முழு அடைப்பு காலத்தை மே 7-வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
தனது முகாம் அலுவலகம் பிரகதி பவனில் நடைபெற்ற ஆறு மணி நேர அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்., “உலகெங்கிலும் உள்ள கோவிட் -19 நிலைமை கவலைக்குரியது. பல நாடுகளில், வைரஸின் பரவல் தணிந்தது, ஆனால் மீண்டும் மீண்டும் வருகிறது.
முழு அடைப்பை நீக்கிய 42 நாடுகள் மீண்டும் ஒரு முழு அடைப்பிற்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளன. அவர்களின் அனுபவங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்,” என்று KCR தெரிவித்துள்ளார்.
நாட்டில் முழு அடைப்பினை மத்திய அரசு மே 3 வரை நீட்டித்திருந்தாலும், அது திங்கள்கிழமை முதல் சில துறைகளுக்கு தளர்வு அளிக்கும் என அறிவித்திருந்தது.
எனினும் தெலுங்கானா முதல்வர்., “அமைச்சரவை மத்திய வழிகாட்டுதல்கள் மற்றும் மாநிலத்தின் நிலைமை குறித்து முழுமையாக விவாதித்ததுடன்,
எந்தவொரு துறைக்கும் எந்தவிதமான தளர்வுகளும் வழங்கப்படக்கூடாது என்றும்,
தற்போதுள்ள வழிகாட்டுதல்களுடன் பூட்டுதல் மே 7 வரை நீட்டிக்கப்பட வேண்டும் என்றும்” என்று முடிவு செய்துள்ளார்.