சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே சோலைவனமாக காட்சியிளிக்கும் கீழப்பூங்குடி எனும் கிராமத்தில் அமைந்துள்ள உதஞ்சான் ஊரணியின் சிறப்பு பற்றி அறிந்து கொள்வோம்.
நாம் குடிக்கும் நீர் தேனினும் சுவை கொண்டது என்றால் நமக்கெல்லாம் நினைவு வருவது ஏதோ சுத்திகரிக்கப்பட்டு பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும் குடிநீரின் பெயர்தான் .
ஆனால் இயற்கையாக மழை காலங்களில் ஊரணிகளில் சேமிக்கப்பட்ட குடிநீர் சுவையை சொல்லி மாளது.
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மக்கள் குடிநீராக 20 ஆண்டுகளுக்கு முன் ஊரணி நீரையே பயன்படுத்தி வந்தார்கள். தற்போது குடிநீர் மாசுபட்ட நீராக மாறிவிட்டது.
ஆனால் சில கிராமங்களில் குடிநீர் ஊரணி முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது..
அந்த வகையில் வற்றாத நீரை தன்னகத்தே கொண்டது தான் உதஞ்சான் ஊரணி.
கிழப்பூங்குடி ஓருகாலத்தில் வனத்தின் நடுவே அமைந்த அழகிய கிராமம் .கிராமத்தின் வடகிழக்கில் அமைந்துள்ள குடிநீர் ஊரணியின் பெயர்தான் உதஞ்சான்.
வனப்பகுதிகளில் பெய்யும் மழை நீர் இந்த ஊரணியில் வந்து சேர்வதால் மூலிகை நிறைந்த சுவைகொண்ட நீரை பன்னெடுங்கலமாக மக்கள் குடிநீராக அருந்தி வருகிறார்கள்..
‘காளையார் புராணத்தில்’ உதஞ்சான் ஊருணி பற்றியும் அதன் உள்ளே கருங்கற்கலால் கட்டப்பட்ட ‘மார்கண்டேஸ்வரர் கோயில்’ பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தகைய சிறப்பு வாய்ந்த ஊருணிதான் உதஞ்சான். வனங்கள் அழிக்கப்பட்டு காப்பு காடுகளாக மாறினாலும் நீரின் சுவை மட்டும் மாறவில்லை .
கோடைகாலங்களில் கீழப்பூங்குடி தவிர அருகில் இருக்கும் கிராமங்களுக்கும் இதுவே குடிநீர் ஆதாரமாக இன்றவும் இருந்து வருகிறது.
தண்ணீர் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் நீரை பருகினால்அதன் சுவையை என்நாளும் மறக்க முடியாது .
இயற்கையின் கொடையாக இதபோல் பல ஊரணிகள் இருக்கின்றன.
– விஜய்