சுயசார்பு பாரதம் என்ற பெயரில் 5 அம்ச நோக்கங்களுடன் திட்டங்கள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி…

சுயசார்பு பாரதம் என்ற பெயரில் 5 அம்ச நோக்கங்களுடன் திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார்..
கொரோனா தடுப்பில் பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி பொருளாதார மேம்பாட்டு திட்ட விவரங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார்.

அதில் சுயசார்பு பாரதம் என்ற பெயரில் 5 அம்ச நோக்கங்களுடன் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்த அவர்
இந்தியா தற்சார்பு நிலையை எட்டுவதற்கான நோக்கத்துடன் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பிரதான் மந்திரியின் கிசான் திட்டத்தின் கீழ் நேரடியாக ஏழைகளுக்கு பணம் செலுத்தப்பட்டது. பொதுமுடக்கக் காலத்தில் இது மிகவும் உதவிகரமாக இருந்தது
சிறு,குறு தொழில்துறைக்கு பிணையின்றி ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு கடனுதவி செய்யப்படும்.
பொது முடக்க காலங்களில் பாதிக்கப்பட்ட சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு பிணையின்றி 20000 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்படும்.
அடமானம் இல்லாமல் சிறு, குறு தொழில் முனைவோர்களுக்கு கடன் உதவி அளிக்கப்படும்.
சிறு,குறு தொழில் வரம்பு நிலை மாற்றப்பட்டுள்ளது.

வராக்கடன் பட்டியலில் உள்ள நிறுவனங்களுக்கு ரூ.50,000 கடனுதவியளிக்கப்படும்.வாராக்கடன் பட்டியலில் உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ.50,000 கோடி; உதவி தேவைப்படும் சிறு,குறு நிறுவனங்கள், வரும் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

200 கோடி ரூபாய் அளவிலான கொள்முதல் டெண்டர்களுக்கு இனி அந்நிய நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது. அவை இந்திய நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

குறுந்தொழில்களுக்கான முதலீட்டு வரம்பு 25 லட்ச ரூபாயில் இருந்து ரூ.1 கோடியாக உயர்வு

நடுத்தர தொழில்களுக்கான வரம்பு ரூ.10 கோடியில் இருந்து ரூ.20 கோடியாக உயர்வு

சிறு தொழில்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ.5 கோடியில் இருந்து ரூ.10 கோடியாக உயர்வு.

ஒவ்வொரு சுகாதார ஊழியருக்கும் ரூ.50 லட்சம் காப்பீட்டுத் தொகையை பன்முகத்தன்மை கொண்ட யோஜனா வழங்கியுள்ளது.

3 மாதங்களுக்கான பி.எப் தொகையை அரசே செலுத்தும்.

அடுத்த 45 நாட்களுக்கு, சிறு, குறு, நடுத்தர நிறுவன உற்பத்தி பொருட்கள் இ-மார்க்கெட் மூலம் விற்க வசதி ஏற்படுத்தப்படும்

வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு, ரூ.30,000 கோடி சிறப்பு மூலதனம் வழங்கப்படும்.
வருங்கால வைப்பு நிதி தொடர்பான அரசின் உதவி மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கும்

ஜூன், ஜூலை, ஆக. மாதங்களுக்கான தொழிலாளர்களின் பி.எப். பங்களிப்பையும் அரசு வழங்கும்

ஏற்கனவே மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான தொழிலாளர்களின் பி.எப். பங்களிப்பை மத்திய அரசு வழங்கியது.

மின்சார நிறுவனங்களுக்கு ரூ.90,000 கோடி நிதியுதவி வழங்கப்படும் – நிர்மலா சீதாராமன் மின் உற்பத்தியில் தன்னிறைவு பெறச்செய்துள்ள மின்சார நிறுவனங்களுக்கு கைகொடுக்கிறது அரசு.

வங்கியல்லாத தொழில் நிறுவனங்கள், வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனங்கள், மற்றும் குறுங்கடன் வழங்கும் நிறுவனங்கள் ஆகியவற்றில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்காக, அந்த நிறுவனங்கள் வழங்கும் வழங்கும் கடனுக்கு இந்திய அரசு பகுதி அளவு உத்தரவாதம் அளிக்கும். இந்த கடன்கள் மூலம் அந்த நிறுவனங்களுக்கு ஏற்படும் முதல் 20 சதவிகித இழப்பை இந்திய அரசு ஏற்றுக்கொள்ளும். இதற்காக 45,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

வங்கியல்லாத நிதி நிறுவனங்கள், வீட்டுக் கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள், மற்றும் குறுங்கடன் வழங்கும் நிறுவனங்கள் ஆகியவற்றில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்காக 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு திட்டம் ஒன்றை மத்திய அரசு தொடங்கவுள்ளது.
வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய மேலும் 3 மாதங்களுக்கு அவகாசம் நீட்டிப்பு

வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே, இந்திய நெடுஞ்சாலை துறை, மத்திய பொதுப்பணித்துறை உள்ளிட்டவற்றின் ஒப்பந்ததாரர்கள் தங்கள் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள பணிகளை முடிப்பதற்கு மேலும் ஆறு மாத காலம் அவகாசம் வழங்கப்படும்

தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : சென்னை வானிலை மையம்..

தமிழக தலைமைச் செயலாளருடன் திமுக எம்பிக்கள் குழு சந்திப்பு..

Recent Posts