தமிழகத்தில் ஊரடங்கை படிப்படியாக நீக்க வேண்டும் என்று முதல்வரிடம் மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளனர்.
தற்போது நடந்து வரும் பரிசோதனை எண்ணிக்கையை குறைக்க கூடாது என தெரிவித்த நிலையில் பணியிடங்களில் தொழிலாளர்களுக்கு மாஸ்க் வழங்கப்பட்டு அனைவரும் மாஸ்க்குடன் பணியாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இந்தியாவிலேயே அதிகமாக பரிசோதனை நடந்தது தமிழகத்தில் தான் என்று ஐசிஎம்ஆர் துணை இயக்குனர் பிரதீப் கவுர் பேட்டியளித்துள்ளார்.
கரோனா பாதித்தவர்களை 3 நாட்களில் அடையாளம் காண வேண்டும் என்றும், அதிக அளவில் கரோனா பரவும் போது அச்சப்படக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.