கேரளாவில் ஜூன் 9 முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு : முதல்வர் பினராயி விஜயன்

கேரள மாநிலத்தி்ல் வரும் 9 ம் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார்.
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்துடன் ஊரடங்கின் போது அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் செல்வதற்கு பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வரும் 30ம் தேதி வரையில் ஒரு சில தளர்வுகளுடன் 5-ம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் இருந்த வருகிறது.
தற்போது தளர்த்தப்பட்ட ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மாநிலங்களில் வழிபாட்டுதலங்களை திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி கேரளாவில் வரும் 9 ம் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும். சபரிமலையில் பக்தர்களுக்கு 50 பேர் வரை அனுமதி வழங்கப்படும்.

வழிபாட்டு தலங்களில் மத்திய அரசின் அறிவுரைப்படி வழிமுறைகள் பின்பற்றப்படும் என மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார்.

ஐஏஎஸ்,ஐபிஎஸ் உள்பட குடிமைப்பணி தேர்வுகளுக்கான புதிய அட்டவணை : யு.பி.எஸ்.சி வெளியீடு..

ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலின் நேரில் நலம் விசாரிப்பு…

Recent Posts