இந்தியாவில் ஒரே நாளில் 9,983 பேருக்கு கரோனா தொற்று :சுகாதாரத்துறை அமைச்சகம்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் புதிதாக 9,983 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 206 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.5 லட்சமாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,135 ஆகவும் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் :

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 9,983 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 56 ஆயிரத்து 611 ஆக அதிகரித்துள்ளது.

அதில், ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 381 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 094 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 206 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 135ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 1,515 பேருக்கு கரோனா தொற்று..

தமிழகத்தில் பத்திரப்பதிவு டோக்கனை இ-பாஸாக பயன்படுத்தலாம்: தமிழக அரசு அறிவிப்பு

Recent Posts