ஊரடங்கு காலத்தில் கடன் தவணைக்கு கூடுதல் வட்டி உச்சநீதிமன்றம் கவலை..

ஊரடங்கு காலத்தில் கடன் தவணையை செலுத்த மத்திய ரிசர்வ் வங்கி 3 மாதங்கள் கால அவகாசம் வழங்கியது.

இதனிடையே வங்கிகள் கடன் தவணைக்காலத்தில் கூடுதல் வட்டி விதிப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஊரடங்கு காலத்தில் கூடுதல் வட்டி விகிப்பது கவலையளிப்பதாக தெரிவித்தது. வட்டி மீது வட்டி விதிப்பது அவர்களின் சுமையை அதிகரிக்காதா எனத் தெரிவித்தனர்.

இதனையடுத்து நிதியமைச்சகம்,ரிசர்வ் வங்கி 3 நாட்களுக்குள் கூடி இது குறித்து ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தவிட்டுள்ளது.

முகக்கவசங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கு என்ன விதிமுறைகள் .: மத்திய,மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி..

இட ஒதுக்கீட்டை அடிப்படை உரிமையாக்க அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும்: ராமதாஸ் ..

Recent Posts