பிரேசில் அதிபர் போல்சனாரோ முகக் கவசம் அணிய வேண்டும் என்று அந்நாட்டின் நீதிபதி ஒருவர் உத்தரவிட்டுள்ளார்.
தலைநகர் பிரேசிலியாவிலும் சுற்றுப் பகுதிகளிலும் இதர பொது இடங்களிலும் அவர் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று நீதிபதி கூறியுள்ளார்.
கொரோனா கிருமிப் பரவலை சரியாகக் கையாளவில்லை என ஏற்கெனவே போல்சானாரோவை மக்கள் குறைகூறி வருகின்றனர்.
உலகிலேயே கொரோனா கிருமியால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசிலும் ஒன்று.
அமெரிக்காவுக்கு அடுத்ததாக 2வது இடத்தில் பிரேசில் உள்ளது. பிரேசிலில் 1.1 மில்லியனுக்கு மேல் தொற்றுச் சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
மேலும் 51,000 பேருக்கு மேல் கிருமித் தொற்று தொடர்பான நோயால் உயிரிழந்துள்ளனர்.