சர்வதேச விமான சேவை ஜூலை 15 வரை நிறுத்தம் : மத்திய அரசு முடிவு…..

சர்வதேச விமானப் போக்குவரத்து ஜூலை 15ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
எனினும் வெளிநாட்டு சரக்கு விமான சேவைக்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை என்றும் அரசு தெளிவுபடுத்தி உள்ளது.

இதற்கிடையே, நாடு முழுவதும் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை ரயில் சேவை நிறுத்தப்படும் என மத்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தற்போது சில மாநிலங்களில் கரோனா கிருமித்தொற்றுப் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதையடுத்து, விரைவு ரயில், பயணிகள் ரயில், நகர்ப்புற மின்சார ரயில்கள் என அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

எனினும், சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ள ரயில்வே நிர்வாகம், ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை பயணத்திற்கு முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டு கட்டணத்தை திருப்பி அளிக்க உள்ளது.

கார் ஓட்டுநருக்கு கரோனா: பாதி வழியில் இறங்கினார் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்

தமிழகத்தில் பாரத் நெட் என்ற இன்டர்நெட் திட்ட டெண்டர் ரத்து : மத்திய அரசு நடவடிக்கை..

Recent Posts