தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 3,713 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 68 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தபாதிப்பு 78,335 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிக்கை
. அந்த அறிக்கையின்படி, ‘தமிழகத்தில் இன்று மட்டும் 32,068 பேருக்கு கரோனா பாதிப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரையில், 10,25,059 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள 3,624 பேருக்கும், வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து திரும்பிய 89 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மொத்தமாக இன்று ஒருநாளில் 3,713 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக இதுவரையில், 78,335 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று மட்டும் 68 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 1,025 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மட்டும் 1,939 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 44-ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் இன்று 2,737 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 44,094-ஆக அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டில் 248 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 98 பேருக்கும், மதுரையில் 217 பேருக்கும், ராமநாதபுரத்தில் 93 பேருக்கும், திருவள்ளூரில் 146 பேருக்கும், திருவண்ணாமலையில் 110 பேருக்கும், வேலூரில் 118 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.