தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 86 ஆயிரத்தை கடந்தது.

தமிழகத்தில் மேலும் 3,949 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 86,224-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனாவால் மேலும் 62 பேர் உயிரிழப்பு; இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,141-ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 2167 கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55,969-ஆக அதிகரித்துள்ளது.

மிழகத்தில் இன்று 2,212 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.தமிழகத்தில் இதுவரை கரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 47,749-ஆக அதிகரித்துள்ளது
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கரோனாவால் 62 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,141-ஆக அதிகரித்துள்ளது.

இன்று உயிரிழந்தவர்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு நோய் பாதிப்பு இல்லாத 11 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் `ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரைக்கவில்லை’ : மருத்துவ நிபுணர்கள் குழு தகவல்..

தமிழகத்தில் ஜூலை 31 வரை பொது முடக்கத்தை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு..

Recent Posts